வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலின்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் T.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அரசின் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்,தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நிவாரணநிதி ரூ 20 லட்சத்திற்கான கசோலையை குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் கூறினர்.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Post A Comment:
0 comments so far,add yours