சர்வதேச சிலம்பப்போட்டி
தங்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு
மதுரை ஆட்சியர் வாழ்த்து
மதுரை மாவட்டம் பரவை பகுதியை சேர்ந்த சிலம்ப ஆசிரியர்களான முத்துநாயகம் மற்றும் இன்பவள்ளி. இருவரும் கணவன் மனைவியாக அப்பகுதியில் உள்ள மாணவ,மாணவிகளுக்கு இலவச சிலம்பக்கலை பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச சிலம்ப போட்டி கடந்த 18 மற்றும் 19 ம் தேதியில் நேபால் நாட்டில் உள்ள போக்காரா எனும் இடத்தில் நடைபெற்றது.
இந்தப்போட்டியில் பரவையை சேர்ந்த சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்களான சோனை,பிரகதீஷ்,ககன்,கனிஷ்கா,ரேஷ்மா,காவ்யா,பிரிதீகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்கள் சர்வதேச சிலம்ப போட்டியில் பங்கேற்ற நிலையில் மதுரையை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலம்பத்தில் இரட்டை கம்பு சுருள், இரட்டை வாள் சுருள், ஒற்றை வாள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை பெற்றனர்.
இந்நிலையில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவ,மாணவிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தாங்கள் பெற்ற தங்கப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
ஆட்சியரும் மாணவர்களின் திறமை மற்றும் வெற்றி பெற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
நமது நிருபர் - சென்னை ஷேக் அப்துல்லா
Post A Comment:
0 comments so far,add yours