நாடாளுமன்றத்தில்
நவாஸ்கனி எம்.பி கோரிக்கை
கருவேல மரங்களை அகற்றி குறுங்காடுகளை ஏற்படுத்த அரசு சிறப்பு திட்டம் வகுத்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.நாடாளுமன்றத்தில் விதி 377 ன் கீழ் நவாஸ்கனி எம்பி கோரிக்கை.
இதுகுறித்து இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி நாடாளுமன்ற மக்களவையில் விதி 377 ன் கீழ் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்ததாவது,
இராமநாதபுரம் மாவட்டம் ஆறுகள் ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்கள் இல்லாத வறண்ட மாவட்டம் ஆகும்.இங்கு கருவேல மரங்கள் அதிகம் இருப்பதால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.
எனவே கருவேல மரங்களை அகற்றிவிட்டு அதிக அளவில் குறுங்காடுகளை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு சிறப்பு திட்டத்தை வகுத்து கூடுதல் நிதியை ஒதுக்கி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதிகளவில் குறுங்காடுகள் ஏற்படுத்த படுவதால்,கருவேல மரங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டு, நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும்,மழைபொழியும் வாய்ப்புள்ளது.
எனவே ராமநாதபுரம் மாவட்டத்தின் நீராதாரங்களை கருத்தில் கொண்டு அதிக அளவில் குறுங்காடுகள் அமைக்க கூடுதல் நிதியை ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்.பி மக்களவையில் விதி 377 ன் கீழ் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours