வெள்ள அபாய எச்சரிக்கை
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு 42,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தற்போது 16 கண் மதகு வழியாக 18,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று (01.08.2022) மாலை மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் 42,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி கரையோர கிராமங்களில் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
காவிரி நீர் நிலைகளில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ “செல்பி”எடுக்க அனுமதி இல்லை என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours