தர்மபுரி BSNL அலுவலகம் அருகே மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
ஜிஎஸ்டி வரி உயர்வு உழைக்கும் மக்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிச தூக்குக்கயிறு,என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் 23.8.2022 அன்று நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக தர்மபுரி BSNL அலுவலகம் அருகே காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவா பென்னாகரம் வட்டார செயலாளர் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் திருமலை, இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் இயக்கத்தை சேர்ந்த முனுசாமி, மாலெ புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு பெரியண்ணன்,
சிபிஐ எம் எல் விடுதலை அமைப்பின் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலாளர் பழனி, சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர் வில் கிருஷ்ணன்,
மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர், அருண் மற்றும் மக்கள் அதிகாரத்தின் மாநில செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக பென்னாகரம் வட்ட குழு உறுப்பினர் தோழர்.குயில் நன்றி உரையாற்றினார். இடையிடையே ஜிஎஸ்டி க்கு எதிரான முழக்கம் மற்றும் பாடல்கள் இசைக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours