விலைவாசி உயர்வை கண்டித்து
அஞ்செட்டி மக்கள் அதிகாரம்
கண்டன ஆர்ப்பாட்டம்
GST வரி உயர்வு உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக்கயிறு!
தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று 23.8.2022 கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்செட்டி வட்டார செயலாளர் ராமு தலைமை தாங்கினார்.
GST வரி உயர்வால் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன உரையாக, நாட்றம்பாளையம் பகுதி மக்கள் அதிகாரம் கனகராஜ், மண்டல குழு உறுப்பினர் சரவணன், IYF அமைப்பைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் சொன்னப்பா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சிறப்புரையாக மக்கள் அதிகாரத்தின் மாநில இணைச் செயலாளர் கோபிநாத் உரையாற்றினார் குறிப்பாக ஜிஎஸ்டியால் மக்கள் படும் துன்ப,துயரங்களையும்,GST வரிவிதிப்பால் யாருக்கு லாபம் என்பதையும், ஏழை மக்களின் உழைப்பை பிடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரி சலுகையாக அள்ளிக் கொடுப்பதையும் அம்பலப்படுத்தி, GST வரிவிதிப்பை எதிர்த்து போராடி முறியடிக்க வேண்டும் என்பதை விரிவாக உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக வட்டார குழு உறுப்பினர் துரை நன்றியுரை ஆற்றினார்.
Post A Comment:
0 comments so far,add yours