இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
திருச்சி தெற்கு மாவட்ட
மகளிர் அணி சார்பாக
முப்பெரும் விழா
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது.நிகழ்வின் தொடக்கமாக முதலில் தாய் சபையின் கொடியை அலாவுதீன் அவர்கள் முன்னிலையில் மேற்கு தொகுதி அமைப்பாளர் கே. எம். எஸ். அப்துல் கபூர் ஏற்றினார்.
நிகழ்ச்சி நிரலின் ஆரம்பத்தில் மகளிரணி மாவட்ட துணைத் தலைவி ஒய் .பீர் நிஷா கிராத் ஓத, மாவட்ட பொருளாளர் எஃப் .ஆரிபா வரவேற்புரை நிகழ்த்தினார்.தலைமை உரையை மகளிர் அணி மாவட்ட தலைவி பேராசிரியர் முனைவர் பைரோஸ் வழங்க, மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவி எம்.ரஜபுன்னிஸா வாழ்த்துரை வழங்கினார்.
அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.கே.ஜாகிர் உசேன், துருப்பு பள்ளிவாசல் தலைவர் கே.எம்.பி.அப்துல் ஜலீல் மற்றும் மேற்கு தொகுதி அமைப்பாளர் கே.எம்.எஸ்.அப்துல் கபூர் சிறப்புரை நிகழ்த்தினார்.திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் நிறைவு உரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பி.எம்.ஹுமாயூன்,திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் H.சையது ஹக்கீம்,இளைஞர் அணி துணைத் தலைவர் முகமது கவுஸ் மற்றும் பேராசிரியர் மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியாக மாவட்ட செயலாளர் K.M.K.ஹபீபுர் ரஹ்மான், அரசு வழக்கறிஞர் M.K.ஜாகிர் உசேன்,மாவட்டத் துணைத் தலைவர் கே.எம்.பி. அப்துல் ஜலீல்,மேற்கு தொகுதி அமைப்பாளர் கே.எம்.எஸ்.அப்துல் கபூர் மற்றும் A.K.அலாவுதீன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.மாவட்ட துணைத் தலைவி A.ஆயிஷா நன்றி உரையாற்றினார்.
Post A Comment:
0 comments so far,add yours