சிந்திக்க சில நொடிகள் நூல் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு சிறப்புரை
செல்வி ஜெ சுல்தானா பர்வீன் எழுதிய சிந்தனைக்காக சில நிமிடங்கள் மூன்று பாகங்கள் அடங்கிய புதிய நூல் வெளியீட்டு விழா தேனாம்பேட்டை திமுக இளைஞரணி அலுவலகம் அன்பழகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தமிழ்நாடு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் தலைமை தாங்கினார்.நூலின் பதிப்பாசிரியர் நிலா ஒளி பதிப்பகத்தின் உரிமையாளர் ஆர்.நயினார் முஹம்மது முன்னிலை வகித்தார்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நூலை வெளியிட்டு சிறப்புரை யாற்றினார்.
இவ்விழாவில் எல்.கே.எஸ்.ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மீரான், முன்னாள் அமைச்சர் தங்கவேலு,தேனி மாவட்ட தி.மு.க., பொறுப்புக் குழு உறுப்பினர் கம்பம் சாதி எம்.சி,ராயப்பேட்டை கூட்டுறவு சங்க செயலாளர் அசன் மைதீன், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந் மாநிலச் செயலாளர் எஸ்.எல்.சிக்கந்தர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
தமுமுக செயலாளர் பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி வாழ்த்துரை வழங்கினார்.
Post A Comment:
0 comments so far,add yours