TN Urban E-sevai செயலியை
கே.என்.நேரு
தொடங்கி வைத்தார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மை செயல் திட்டம் குறித்த ஒருநாள் கருத்தரங்கை சென்னையில் இன்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இந்த கருத்தரங்கில் சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி செலுத்துதல், புகார் பதிவு செய்தல் உள்ளிட்ட பல வசதிகளுடன் கூடிய TN Urban E-sevai செயலியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்துவைத்தார்.
அதைத்தொடர்ந்து எழில்மிகு நகரம் என்ற தலைப்பில் தூய்மை நகரங்களின் முயற்சிக்கான மாத இதழையும் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில், துறைசார்ந்த அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours