திருச்சி காவிரி பாலம் மூடப்படும்
அதிகாரிகள் தகவல்
திருச்சி காவிரி பாலம் வருகிற 10-ஆம் தேதி நள்ளிரவு முதல் மூடப்படும் என அதிகாரிகள் தகவல்
திருச்சி காவிரி பாலம் மிகவும் பழுதடைந்து விட்டது. இரண்டு சக்கர வாகனங்கள் கூட மிகவும் சிரமப்பட்டு அப்பாலத்தில் பயணிக்கின்றன. கடந்த மூன்று மாத காலமாக காவிரி பாலத்தை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினர் திட்டமிட்டு வந்தனர்.
இந்நிலையில் முதலில் ஆடிப்பெருக்கு விழா வந்ததால் காவிரி பாலம் மூடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்கு அடுத்ததாக காவிரியில் அதிக அளவு நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மூடுவதை தள்ளி வைத்தனர். அது மட்டுமில்லாமல் கடந்த 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று விநாயகர் சிலைகள் காவிரி பாலத்தில் வைத்து கரைக்கப்பட்டன.
இந்நிலையில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய காவிரி பாலத்தில் அதற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டடுள்ளன.
வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் காவிரி பாலம் ஒரு வழியாக பராமரிப்பு பணிக்காக மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமே அப்பாலத்தில் பயணிக்க அனுமதிக்கப்படும். நான்கு சக்கர வாகனங்கள், கனரக வானங்கள் என அனைத்தும் ஓயாமாரி பகுதி வழியாக சென்று திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ள பழைய காவிரி பாலம் வழியாக மீண்டும் கும்பகோணத்தான் சாலையில் திருவானைக்காவல்,ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இப்பாலத்தில் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு மேலாக பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours