2998 மாணவ மாணவிகளுக்கு
மிதிவண்டிகள்
அப்துல் சமது MLA வழங்கினார்
மணப்பாறை தொகுதியில் உள்ள 20 மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 2998 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் ரூபாய் 1,51,50,000/ (1கோடியே 51 லட்சத்து 50 ஆயிரம்) மதிப்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி மணப்பாறை சிறுமலர் (Little Flower) மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வில் மாணவ மாணவிகளுக்கு திருச்சி மணப்பாறை தொகுதி MLA அப்துல் சமது மிதிவண்டிகள் வழங்கினார்
இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர், வட்டாட்சியர், மருங்காபுரி மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், மாவட்ட தலைவர் திருச்சி ஃபைஸ் M.C, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours