ராகுல் காந்தி

7-ந் தேதி கன்னியாகுமரி வருகை


12 மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வருகிற 7-ந் தேதி கன்னியா குமரியில் இருந்து பயணத்தை தொடங்குகிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அவர் பங்கே ற்கிறார்.

இதனை தொடர்ந்து அவர் குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் செல்கிறார். இதையொட்டி அவரது பயண பாதைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ரா கார்க் குமரி மாவட்டம் வந்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீஸ் அதிகாரிகளோடு ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோச னையும் வழங்கினார்.

இந்த நிலையில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்த கூடுதல் டி.ஜி.பி. தாமரைக் கண்ணன் இன்று (6-ந் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். அவர் பாதயாத்திரை தொடங்கும் கன்னியாகுமரி காந்தி மண்டபம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் திடல் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்

நமது நிருபர்சென்னை ஷேக் அப்துல்லா

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours