முதல் முறையாக
ராஜீவ் நினைவிடம் செல்லும் ராகுல்
அகில இந்திய காங்கிரஸ் பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை நடைபெறுகிறது.
இந்த பாத யாத்திரையை ராகுல் நாளை (7-ந் தேதி) கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறார்.
150 நாட்கள் அவர் பாத யாத்திரையாக செல்கிறார். இதற்காக ராகுல்காந்தி இன்று இரவு 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வருகிறார்.விமான நிலையத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் வரவேற்கிறார்கள்
ராகுல் காந்தியுடன் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பாகல் மற்றும் மூத்த தலைவர்கள் வருகிறார்கள்.
சென்னை விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் சென்னை அல்லது ஸ்ரீபெரும்புதூரில் இரவு தங்குகிறார்.சென்னையில் விமான நிலையம் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டல், ஸ்ரீபெரும்புதூரில் சத்யம் ரிசார்ட் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
நாளை காலை 6.45 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்துக்கு செல்கிறார்.
அங்கு தனது தந்தையின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி வணங்குகிறார். அதை தொடர்ந்து 7 மணி முதல் 8 மணி வரை நினைவிடத்தில் தியானம் செய்கிறார்.
அதன்பிறகு மரக்கன்று நடுகிறார். பின்னர் அங்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார்.
Post A Comment:
0 comments so far,add yours