திருச்சி சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் உயர்வு
தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகின்றது.ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில்.தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டு இன்று செப்டம்பர் 1ல் திருச்சி சமயபுரம், துவாக்குடி வாழவந்தான் கோட்டை,பொன்மலைப்பட்டி, திருப்பராய்த்துறை, கரூர் மணவாசி, நாமக்கல், தர்மபுரி,விழுப்புரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 28 சுங்க சாவடிகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பழைய கட்டணத்தை விட தற்போது 15 சதவீத கட்டண உயர்வு என்று கூறப்படுகிறது.கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கு ஒருவழி கட்டணமாக 90 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், 10 ரூபாய் உயர்த்தப்பட்டு, 100 ரூபாயாகியுள்ளது.
பலமுறை பயணம் செய்ய 135 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 150 ரூபாய் செலுத்த வேண்டும், இதில் மாதா கட்டணம் 2660 ரூபாயில் இருந்து, 3045 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இலகு ரக வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணம் 180 ரூபாயாகவும், பலமுறை பயணம் செய்ய 265 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம் ஐந்தாயிரத்து 330 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பேருந்துகளுக்கு ஒருவழி கட்டணம் 355 ரூபாயாகவும், பலமுறை பயணம் செய்ய 535 ரூபாயாகவும் சுங்கக் கட்டணம் அதிகரிக்கிறது.மாதாந்திர கட்டணம் 10 ஆயிரத்து 665 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பல அச்சு வாகனங்களுக்கு ஒரு வழிக்கட்டணம் 570 ரூபாயாகவும், பலமுறை பயணம் செய்ய 855 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம் 17 ஆயிரத்து 140 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours