இலால்குடி
ராணுவ வீரர் மரணம்
லடாக்கில் பணியில் இருந்த லால்குடி அருகே நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் ரெமி ஜூலியன் (வயது 43). கடந்த 1999 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த ரெமி ஜூலியன் தற்போது இன்ஜினியரிங் ரெஜிமென்ட் யூனிட்டில் ஹவால்தாராக பணியில் இருந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் பணியில் இருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 19ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து அவர் குடும்பத்தினருக்கு ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் லடாக்கில் இருந்து நேற்று (புதன்கிழமை) விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் நெய் குப்பையில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
ரெமி ஜுலியனுக்கு திருமணமாகி ஜான்ஸிராணி என்ற மனைவியும் ஜெனித் ஜோயல்(9) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours