திருநங்கைகள் நடத்தும்
இ-சேவை மையம்
கே.என்.நேரு
திறந்து வைத்தார்






திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், அவர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் வகையிலும், தமிழ் நங்கை என்னும் பெயரில் திருநங்கைகள் நடத்தும் இ-சேவை மையம் மற்றும் பழச்சாறு நிலையத்தினை இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன்,திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours