திருச்சியில் பள்ளத்தில் சிக்கிய லாரி போக்குவரத்து பாதிப்பு - பொதுமக்கள் அச்சம்
திருச்சி,தென்னூர் அரசமரத்தடி பேருந்து நிறுத்தத்தில் சற்று நேரத்திற்கு முன்பாக சிவன் கோவில் அருகே லாரி ஒன்று பெரும் பள்ளத்தில் மாட்டிக் கொண்டு சிறிது சாய்ந்த நிலையில் சாலையின் நடுவே நின்றது.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
லாரி ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் லாரி சாய்ந்து விடாமல் சிறிது நேரத்திற்கு பிறகு நிலைநிறுத்தப்பட்டு பள்ளத்திலிருந்து கடந்து சென்றது.
வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பள்ளத்தின் அருகே நடுநிலைப்பள்ளி இருப்பதால் இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு கவனம் செலுத்தி உடனடியாக சரிசெய்து கொடுத்திட வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.
Post A Comment:
0 comments so far,add yours