திருச்சி மாநகரில்

வாகன தணிக்கைக்கு

12 பாடி வோன் கேமராஸ்


திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் பொது மக்களின் நலனை பேணிக்காக்கவும் ரோந்து பணி செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அறிவுரை வழங்கி வருகிறார்.

தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக அரசால் திருச்சி மாநகருக்கு  12 பாடி வோன் கேமராஸ் வழங்கப்பட்டது.

மேற்கண்ட 12 கேமராக்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி திருச்சி மாநகரத்தில் உள்ள 6 போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு தலா இரண்டு வீதம் வழங்கப்பட்டது.

போக்குவரத்து காவல் நிலை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும்,மேம்படுத்தி சீர் செய்யவும் மேலும் வாகன தணிக்கையின் போது ஏற்படும் இடர்பாடுகளை கேமரா பதிவுகளை கொண்டு சரி செய்யவும்,

சாலை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யும்போது உபயோகப்படுத்தவும், போக்குவரத்து நெரிசல் காணப்படும் இடங்களை கண்டறிந்து கேமரா பதிவுகளை கொண்டு உயர் அதிகாரிகள் ஆய்வு செய்யும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கேமராக்களை கொடுத்து,காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு இதன் பயன்பாடு குறித்து தக்க அறிவுரைகளை வழங்கிள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours