லால்குடி அருகே
பள்ளி வாகன விபத்து
இருவர் காயம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மாந்துறையில் பாரத் நர்சரி என்ற பெயரில் தனியார் பள்ளி உள் ளது. 1994 ம் ஆண்டு துவங்கி இப்பள்ளியில் 89 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் வேன் டிரைவர் அங்குராஜ் (50 ) பள்ளி வேனில் 5 குழந்தைகள் மற்றும் வேன் உதவியாளர் அகிலா என்பவருடன் மாந்துறை சென்ற போது பம்பரம்சுற்றி பகுதியில் சாலையோர மண்ணில் புதைந்து அருகில் உள்ள நெல் பயிரிட்டுள்ள வயலில் வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த வேன் உதவியாளர் அகிலா 5 ம் வகுப்பு மாணவி சன்மதி (10) ஆகிய இருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மீதமுள்ள பள்ளி குழந்தைகள் நல்வாய்ப்பாக காயங்களின்றி உயிர் தப்பினர்.
விபத்திற்குள்ளான பள்ளி வாகனத்திற்கு, ஆர்சி புக் இல்லை, பர்மிட் இல்லை, இன்சூரன்ஸ் போன்றவைகளும் இல்லை.அதே போல இப் பள்ளிக்கான அரசின் உரிமம் இந்தாண்டு மே மாதத்துடன் முடிவடைந்தது. இதனை இன்னும் புதுபிக்கவில்லை என்றனர் கல்வித்துறை அதிகாரிகள்.
இச்சம்பவம் குறித்து லால்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours