புதிய பேருந்து நிலையம்
துருக்கி ரபீக்ராஜா ஆலோசனை
நேற்று (4/9/22) இரவு 9மணி அளவில் இளையான்குடி புதிய பேருந்து நிலைய திட்டத்தை ரத்து செய்ய அடுத்தகட்ட நடவடிக்கையை துவங்குவது தொடர்பாக மக்கள் நல கூட்டமைப்பு நிர்வாகிகளும் சமுக ஆர்வளர்களும் பல ஆலோசனைகளை வழங்கினர்.
அதன்படி முதல்கட்டமாக நோட்டிஸ் மூலமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அடுத்ததாக அனைத்து வார்டிலும் தெருமுனை பிரச்சாரம் செய்வது மேலும் அந்தந்த வார்டு மக்கள் மூலமாக வார்டு கவுன்சிலர்களிடம் பஸ் நிலையம் வேண்டாம் என மனுகொடுப்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் கவுன்சிலர்கள் வீட்டு முன்பாக அந்தந்த வார்டு மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவது அடுத்து மக்களை திரட்டி தொடர் தர்ணா போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு இளையான்குடி மக்கள் நல கூட்டமைப்பு செயலாளர் துருக்கி ரபீக்ராஜா.தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours