செல்போன், இரு சக்கர வாகனம்

திருடிய நபர் குண்டர் சட்டத்தில் கைது


கடந்த 16.08.22-ம்தேதி கீழ ஆண்டாள் வீதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தி காண்பித்து பணம் ரூ.2300/-த்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி அய்யப்பன் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் அய்யப்பன் மீது திருச்சி மாநகரம் காந்திமார்க்கெட், ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை காவல்நிலைய எல்லையில் இருசக்கர வாகனத்தை திருடியதாக 03 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் திருடியதாக 02 வழக்குகளும், தஞ்சாவூர் மாவட்டடத்தில் செல்போன் கடை உடைத்து செல்போன்களை திருடியதாக 02 வழக்குகளும், கத்தியை காண்பித்து பணம் பறித்து சென்றதாக 02 வழக்குகள் உட்பட மொத்தம் 09 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரி அய்யப்பன் என்பவர் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருட்டு, கத்தியை காண்பித்து பொதுமக்களிடம் பணம் கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குணம் கொண்டவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours