எஜுகேசனல் அகாடமி

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா


நேற்று சனிக்கிழமை மாலை பி.பி.அக்ரஹாரம் ரவி மஹாலில்  ஈரோடு எஜுகேசனல் அகாடமி சார்பில் நடைபெற்ற பதினாறாம் ஆண்டு கல்வி உதவித். தொகை வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க எனக் கூறுவார்கள்.அந்த பதினாறு நற்பலன்களை வழங்க முன்னோடியாக இருக்கும் கல்வியின் சிறப்பை கூறுமளவுக்கு விழா அமைந்தது.

சிறப்பு அழைப்பாளராக மாணவர்களின் முன்னோடியாக திகழும் நமது மாவட்டஅடிசனல் கலெக்டர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் முன்னிலை வகிக்க ,ஹாஜி அயூப் வரவேற்புரை நல்க, கேகேஎஸ்கே ரபீக் ஹாஜியார் தலைமை உரை வழங்க,மருத்துவர் ஹாஜி அபுல் ஹசன்  திட்ட விளக்க உரை நிகழ்த்த , ஹாஜி டாக்டர் சையது சபியுத்தீன் நன்றியுரை நல்கினார்.

ஹாஜி சையது இப்ராஹீம் அதனைச் செம்மையாக சீர்படுத்தி வரலாற்று சான்றுகளோடு சொற் பெருக்காற்றினார்.

முன்னூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் ரூபாய் ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூபாய் நான்காயிரம் வரை கல்வி உதவித் தொகை பெற்றனர்.கல்வி உதவித் தொகை வழங்கிய நல் உள்ளங்களுக்கு வல்ல அல்லாஹ் மென்மேலும் செல்வச் செழிப்புடன் விளங்கும் வாழ்க்கையைத் தந்தருள்வானாக! நோய் நொடியற்ற நல்வாழ்வினை நல்குவானாக!!

இவ்வாறு உண்மைஉணர்வு மாத இதழ் ஆசிரியர் M.ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.


Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours