திருச்சியில்
தங்கும் விடுதி
மு.க.ஸ்டாலின் திறப்பு
திருச்சியில் ரூ.4 கோடியே 17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியினை காணொளி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் ரூபாய் 4 கோடியே 17இலட்சத்து 10ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி மற்றும் கூட்ட அரங்கினைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.9.22) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்.
இதனையொட்டி திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.இராஜேந்திரன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மத்திய மண்டல மேலாளர் தி.மு.கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் சு.முனிசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலர் த.ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours