திருச்சியில் நாளை(28.09.2022)
மக்களை தேடி மாநகராட்சி
குறைதீர்ப்பு முகாம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு அறிவுரையின்படி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் "மக்களைத்தேடி மாநகராட்சி" குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இறுதி புதன்கிழமையன்று நடைபெறுகிறது.
"மக்களைத்தேடி மாநகராட்சி" குறை தீர்க்கும் முகாம் வருகின்ற புதன்கிழமை 28.09.2022-ம் தேதி அன்று மண்டலம் எண்:3 கைலாஷ் நகர், காட்டூர் சி.கே.சுமதி சந்தோஷ் மஹாலில் நடைபெற உள்ளது. இம்மண்டல அலுவலகத்திற்குட்பட்ட 13 வார்டு பகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக இக்குறைதீர்க்கும் முகாமில் அளித்து பயன்பெற்றுக்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours