ஒருங்கிணைந்த கடல்சார்
படைகளின் பயிற்சி
இந்திய கடற்படை
கப்பல் பங்கேற்பு
ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் தெற்கு தயார்நிலை செயல்திட்ட வருடாந்திர பயிற்சியில் பங்கேற்பதற்காக ஐ.என்.எஸ் சுனைனா கப்பல் செப்டம்பர் 24 அன்று செஷல்சின் விக்டோரியா துறைமுகத்தை சென்றடைந்தது.
இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பில் இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை இந்தப் பங்கேற்பு மீண்டும் வலியுறுத்தும். ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் பயிற்சியில் இந்திய கடற்படை கப்பல் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது கூடுதல் சிறப்பம்சம்.
ஒருங்கிணைந்த கடல்சார் படைகளால் நடத்தப்படும் திறன் கட்டமைப்பு பயிற்சிகளில் சக கூட்டாளியாக இந்தக் கப்பல் கலந்து கொள்ளவிருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிக் குழுவுடன் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் இந்தக் கூட்டு பயிற்சியில் பங்கேற்கும்.
பயிற்சியில் கலந்து கொள்ளும் பிற நாட்டினருடன் கலந்துரையாடல் நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours