புத்தக திருவிழா
கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கே.என்.நேரு
திருச்சி புத்தக திருவிழா வருகின்ற செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட திருச்சி புத்தக திருவிழா குறித்த விழிப்புணர்வு பேரணியை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு.
இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன்,ஸ்டாலின்குமார், பழனியாண்டி,மாநகராட்சி மேயர் அன்பழகன்,திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோருடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





.jpeg)



Post A Comment:
0 comments so far,add yours