காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டீல் சங்க பொதுக்குழு
K.M.S.ரபீக் அகமது தகவல்
K.M.S.ரபீக் அகமது |
திருச்சியில் வருகிற 29ந் தேதி காயிதேமில்லத் ஆட்டோ ஸ்டீல் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் நடைபெறுகிறது
இது குறித்து காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டீல் சங்க தலைவர் K.M.S ரபீக் அஹமது கூறியிருப்பதாவது
காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டீல் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் வருகிற 29ந் தேதி (வியாழக்கிழமை) திருச்சி அரிஸ்டோ டைமன் மஹாலில் நடக்கிறது
இதைதொடர்ந்து இன்று (18 ந்தேதி) வேட்பு மனுக்கள் பெறப்பட்டது
எனவே சங்க உறுப்பினர்கள் உடனடியாக சந்தாவை செலுத்தி போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சந்தாவை திருச்சி பீம நகரில் உள்ள கே.எம்.எஸ் மஹால் சங்க தலைமை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.எனவே 29ந் தேதி வியாழக்கிழமை காலையில் தொடங்கி மாலை வரை நடக்கும் பொதுக்குழுவில் &தேர்தல் மற்றும் விருந்திலும் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு காயிதே மில்லத் ஸ்டீல் சங்கத்தின் தலைவர் K.M.S.ரபீக் அகமது கூறியுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours