என் நகரம் என் அடையாளம்
கண்காட்சி கே.என்.நேரு
திறந்து வைத்தார்
திருச்சிராப்பள்ளி மாநகரத்தை மேம்படுத்த, மாநகராட்சி முன்னெடுக்கும் செயல்பாடுகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டு வந்தது. இது தொடர்பாக புதிதாக சீரமைக்கப்பட்ட மாநகராட்சி மைய அலுவலக பூங்காவில் செப்டம்பர் 16,17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்கள் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், ” என் நகரம் என் அடையாளம்” என்னும் பெயரில் நடைபெற்ற வரைபட விளக்க கண்காட்சியை பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறந்து வைத்து பார்வையிட்டார் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்,துணை மேயர் ஜி.திவ்யா. ஆகியோருடன் அரசு அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours