பல்வேறு திட்டங்கள்

கே.என்.நேரு

பி.கே.சேகர் பாபு

தொடங்கி வைத்தனர்.





சென்னை நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் பகுதி 5 வார்டு எண் 54,55,57 க்குட்பட்ட பகுதிகளில் புதிய கழிவு நீர் உந்துகுழாய் பதிக்கும் பணி தொடக்கவிழா மற்றும் கழிவு அகற்றும் நிலையம்

அதனை தொடர்ந்து புதிய பணிமணை அலுவலக கட்டிடம் போன்ற பல்வேறு திட்டங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே.சேகர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,சட்டமன்ற உறுப்பினர்கள்,துணை மேயர் சைதை மு.மகேஷ்குமார் மற்றும்  அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

நமதுநிருபர் - K.ஷாகுல் ஹமீது - திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours