விமானப்படை முகாமிலிருந்து
சென்னை திரும்பிய
என்சிசி படை
அகில இந்திய விமானப்படை ராணுவ முகாமிலிருந்து வெற்றிகரமாக என்சிசி படைப்பிரிவு சென்னை திரும்பியது
தேசிய மாணவர் படையின் (தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார்) இயக்ககத்தின் அகில இந்திய விமானப்படை ராணுவம் முகாமிலிருந்து வெற்றிகரமாக இன்று சென்னை திரும்பியது.
இந்த இயக்ககத்தின் அணி பல்வேறு போட்டிகளில் 3 தங்கப் பதக்கங் களையும், 3 வெள்ளிப் பதக்கங் களையும் வென்றது. ஒட்டுமொத்த கோப்பைக்கான போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
இந்த அணியின் சிறப்பு மிக்க செயல்பாட்டிற்காக இயக்ககத்தின் துணை தலைமை இயக்குனர் கமாடோர் அத்துல் குமார் ரஸ்தோகி பாராட்டு தெரிவித்தார். இந்த அணியினரை மாநில விளையாட்டுக்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ வி மெய்யநாதன் தனிப்பட்ட முறையில் கவுரவித்து ஊக்கப்படுத்தினார்.
புதுதில்லியில் உள்ள என்சிசி தலைமை இயக்குனரகத்தால், இந்த வருடாந்திர நிகழ்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள என்சிசி பிரிவுகளின் 5 விமானப்படை அணிகளால் பெறப்பட்ட பயிற்சியின் தரத்தை மதிப்பீடு செய்வதற்காக இந்த முகாம் நடத்தப்பட்டது.
ராஜஸ்தானின் ஜோத்பூரில் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 5 வரை போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களைச் சேர்ந்த என்சிசி பிரிவுகளில் 5 விமானப்படை அணிகள் தெரிவு செய்யப்பட்டன.
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours