சிதம்பரத்தில்
கால் பாத அழுத்த
சிகிச்சை வகுப்பு
சிதம்பரத்தில் உள்ள தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கத்தின் சார்பாக மருத்துவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஒருநாள் சிறப்பு வகுப்பாக கால் பாத அழுத்த சிகிச்சை வகுப்புகள் நடைபெற்றது.
இதில் மருத்துவர் ரவிச்சந்திரன் கால் பாத அழுத்த சிகிச்சை கோட்பாடு மற்றும் நடைமுறைகள் பற்றி விளக்கம் கொடுத்தார்.அங்கு சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு முதுகு வலி, கைவலி,கை தூக்க முடியாமை போன்ற பல பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டது
மேலும் இந்த சிறப்பு வகுப்பில் கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் கருணா மூர்த்தி,பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மதிய உணவும் கொடுத்து வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours