மயிலாடுதுறையில்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மயிலாடுதுறையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் கிளியனூர் M.M.அபுல் ஹசன் தலைமையில் கூடியது.
உறுப்பினர் சேர்க்கை பணிகளை விரைந்து முடித்து பிரைமரி நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி தருமாறு அறிவுறுத்தல்.
மாவட்டத்தின் மூன்று சட்டமன்றதொகுதிகளில்,மயிலாடுதுறை, மணிக்கிராமம்,பொறையார் பகுதிகளில் மீலாதுந்நபி - சமய நல்லிணக்க பொதுக்கூட்டம் நடத்திட ஏற்பாடு.
நவம்பர் முதல் வாரத்தில் மாவட்ட பொதுக்குழு பணிகள் தீவிரம்.
உற்சாகத்துடன் கட்சிப்பணிகளில் ஈடுபடும் தாய்ச்சபை உறுப்பினர்களுக்கு புதிய பொருப்புகள் பொதுக்குழுவில் அறிவிக்க பரிசீலணை.
10.03.2023. முஸ்லிம் லீக்75 ஆம் ஆண்டு பவள விழா மாநாட்டிற்கு களப்பணிகள் செய்து நமது மாவட்டத்திலிருந்து பல்லாயிரம் பேர் பங்கேற்க சிறப்பு ஏற்பாடுகள்.
மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் சேவை விரைவில் துவக்கம்.
கட்சியில் ஏராளமானோர் தொடர்ந்து புதிய உறுப்பினர்களாக இணைந்து வருகிறார்கள். அவர்களுக்கு உற்சாக வரவேற்புடன், பொன்னாடை போர்த்தி கவுரவிப்பு.
இன்று மணிக்கிராமம் ரஹ்மத்கான் (மயிலாடுதுறை) முஸ்லிம் லீகில் இணைந்தார். தக்பீர் முழக்கத்துடன் பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு.
மாநில தலைமை அறிவுறுத்தலுக்கிணங்க, அக்டோபர் 11, சமய நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் முஸ்லிம் லீகினர் ஏராளமானோர் பங்கேற்க அறிவுறுத்தல்.
கட்சி வளர்சிக்கான அனைத்து பணிகளும் செயல்படுத்திட ஆலோசனை கருத்துக்கள் பகிர்வு.
சிறப்பு நிருபர் - A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை
Post A Comment:
0 comments so far,add yours