ஆயுதங்களுடன்
தங்கியிருந்த
குற்றவாளிகள் கைது
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 6 குற்றவாளிகள் கைது
தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் காவல் நிலைய எல்கைகுட்பட்ட கிருஷ்ணாபுரம் பருத்திவிலை தெருவில் சில நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாகவும் , பொதுமக்கள் அச்சமுற்றதாகவும் , கிடைத்த இரகசிய தகவலின் படி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் .உத்தரவின்பேரில்
காவல் துணை கண்காணிப்பாளர்கள் பொன்னரசு ,அசோக் ஆகியோர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார் , விஜயகுமார் மற்றும் காவலர்கள் கிருஷ்ணாபுரம் பருத்திவிலை தெருவில் உள்ளள வீடுகளை சோதனை செய்ததில் சரோஜா என்பவரது லைன் வீட்டை சோதனை செய்யும்போது மாடியில் உள்ள ஒரு வீடு மட்டும் கதவை தட்டியும் திறக்காத காரணத்தால் சந்தேகம் அடைந்து சட்டவழி முறைகளை பின்பற்றி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 6 நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
பின்னர் மேற்படி நபர்களை விசாரணை செய்ததில் சேரன்மகாதேவி சங்கன்திரடு தெற்கு தெருவை சேர்ந்த முப்புடாதி (எ) ஆறு (27). நெட்டூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் சுரேஷ் கண்ணன் (எ) நெட்டூர் கண்ணன்
மேலசெவல் பகுதியைச் சேர்ந்த பிச்சையா என்பவரின் மகன் லட்சுமணகாந்தன் (எ) கருப்பசாமி, ஊத்துமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் மாரிமுத்து, அய்யனார் குளம் நடுத்தெருவை சேர்ந்த உக்கிரமசிங்கம் என்பவரின் மகன்களான சூர்யா மற்றும் சத்யா என்றும்,
மேற்படி நபர்கள் குற்றம் செய்யும் நோக்கத்துடன் மேற்படி வாடகை வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. எனவே மேற்படி ஆறு நபர்கள் ஆறு நபர்கள் மீதும் கடையநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்படி நபர்களை கைது செய்து விசாரணை செய்ததில்
மேற்படி முப்புடாதி (எ) ஆறு என்பவருக்கு நெல்லை, தென்காசி மற்றும் பிற மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி ஆயுதத்தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட 21 வழக்குகளும்,
சுரேஷ் கண்ணன் (எ) நெட்டூர் கண்ணன் என்பவருக்கு நெல்லை, தென்காசி மற்றும் பிற மாவட்டங்களில் கொலை, கொலைமுயற்சி ஆயுதத்தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட 27 வழக்குகளும்,
லட்சுமண காந்தன் என்பவருக்கு கொலை, கொலைமுயற்சி உட்பட 15 வழக்குகளும், மாரிமுத்து என்பவருக்கு கொலை, திருட்டு. கஞ்சா உட்பட 10 வழக்குகளும், சூர்யா என்பவருக்கு கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும். சத்யா என்பவருக்கு கொலை, கொலைமுயற்சி உட்பட 09 வழக்குகளும் உள்ளது என தெரியவந்தது.
மேலும் இது சம்பந்தமாக கடையநல்லூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்ததை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா உபயோகிப்பவர்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 9385678039 என்ற எண்ணின் வாயிலாக தெரிவிக்குமாறு தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Post A Comment:
0 comments so far,add yours