07/16/22

 திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், முக்கொம்பு, காவிரி இடதுகரை வாத்தலை கிராமத்திலிருந்து புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்திற்கு இன்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு தண்ணீர் திறந்து வைத்தார்.






இதன் மூலம் சுற்றுவட்டார பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், அ.சௌந்தரபாண்டியன், சீ.கதிரவன், செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆகியோருடன் அரசு அதிகாரிகள் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 உலக சாதனை திருச்சியில் 2140 பேர் கலந்து கொண்ட சதுரங்க போட்டி




44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் வருகிற (28.7.2022) முதல் (10.8.2022) வரை நடைபெற உள்ளது. இதற்காக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் உலக சாதனை நிகழ்த்தும் விதமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என 40 பள்ளிகளைச் சேர்ந்த 2,120 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் மாபெரும் சதுரங்க விளையாட்டுப் பாடம் நிகழ்ச்சி நடைபெற்றது.


இன்று காலை தொடங்கி சுமார் 2 மணி நேரம் பயிற்சி வகுப்பில் பிரபலமான பாரா ஒலிம்பிக் செஸ் வீராங்கனை கா.ஜெனித்தா ஆண்டோ பங்கேற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்து, செஸ் விளையாட்டிற்கான பயிற்சி பாடம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் செஸ் செட் வழங்கப்பட்டு சதுரங்க விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள் இந்த ஆய்வுகளை மேற்கொள்வதன் அடிப்படையில் உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் உலக சாதனைக்கான சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு  உலக சாதனை சான்றிதழ்களையும், பதக்கங்களையும் சாதனை புத்தகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.


ஒரே இடத்தில் 2,140 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற நிகழ்வு எலைட் உலக சாதனைப் புத்தகம், ஆசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என நான்கு சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.


நிகழ்வில் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு,மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  சுஜித், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

விழுப்புரம் மாவட்டம் - மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டை ஊராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் "உலக பாரம்பரிய உணவு மற்றும் விதை திருவிழாவில்"அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்பித்தார்.














நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி


கிராமங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து  நாட்டுக்கு சேவையாற்றும் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் இராணுவ பள்ளி வைர விழாவில் கலந்து கொண்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 









1969'ம் ஆண்டில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும், 2010'ம் ஆண்டில் மாண்புமிகு முதல்வர் அவர்களும் இப்பள்ளிக்கு வருகை தந்து புதிய கட்டிடங்களை திறந்து வைத்துள்ளார்கள்.

தற்போது மாண்புமிகு முதல்வர் அவர்களால் அளிக்கப்பட்ட வாழ்த்து செய்தியினை கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அரங்கத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சைனிக் பள்ளியின் சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டு, புதிய ஊழியர் குடியிருப்புகளையும் திறந்து வைத்ததில் மிக்க மகிழ்ச்சி என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பள்ளியின் முதல்வர் கேப்டன் நிர்மல் ரகு அவர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

திருச்சி காந்தி சந்தை மரக்கடையில் அண்ணா சாமில் என்ற பெயரில்  இயங்கிவந்த மர இழைப்பு பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டது என்பதை அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விபத்திற்கான காரணத்தை கடையின் உரிமையாளர் திரு. எஸ்.வெங்கடேஷ் அவர்களிடம் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ அவர்கள் கேட்டறிந்தார் அவர்களுக்கு ஆறுதல் கூறினார் 



நிகழ்வின்போது இளநிலைப் பொறியாளர் ராஜா, 19வதுவார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.கே.சாதிக்பாட்சா, தி.மு.கழக நிர்வாகிகள்,மற்றும் ம.தி.மு.க., முஸ்தபா M.C., மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 வெள்ள அபாய எச்சரிக்கை - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


மா.பிரதீப் குமார்

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று (15.07.2022) மாலை 4.00 மணியளவில் 115.730 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்குள் 120 அடியை எட்டும் என்றும், எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எனவே காவிரி கரையோர கிராமங்களில் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்துகொள்ளுமாறும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

காவிரி நீர் நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்குவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ “செல்பி” ( Selfie ) எடுக்க அனுமதி இல்லை. என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.


நமது நிருபர் R.நவாப்கான் - திருச்சி