07/29/22

 திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு




திருச்சி மாநகரம் கே.கே.நகர், மாநகர ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி ரைபிள் கிளப் கடந்த 31.12.2021 முதல் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள்சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் 24.07.2022-ந்தேதி முதல் நடைபெற்றுவருகிறது.

தமிழகம் முழுவதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இப்போட்டியானது திருச்சி ரைபிள் கிளப்பில் முதல் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியில் 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர்கள் இளைஞர்கள், முதியவர்கள், என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத் (16 வயது வரை), யூத் (19 வயது வளர) ஜீனியர் (21 வயது வரை) சீனியர் (21முதல் 45 வரை), மாஸ்டர் (45 வயது முதல் 60 வயது வரை) மற்றும் சீனியர் மாஸ்டர் ( 60 வயதுக்கு மேல்) தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

24.07.2022-ந் தேதி முதல் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குபெற்றவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று 28.07.2022-ந்தேதி பரிசுகள் வழங்கப்பட்டது.இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனர் W.I.தேவாரம்,திருச்சி மாநகர காவல் ஆணையர்  G.கார்த்திகேயன், ,மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார், திருச்சி ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தூர்செல்வன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் இனமுருகன் மற்றும் கிளப்பின் தலைமை அதிகாரி சந்திரமோகன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில், வெற்றிபெற்ற 56 நபர்களுக்கு தங்கம் பதக்கமும், 55 நபர்களுக்கு வெள்ளி பதக்கமும், 51 நபர்களுக்கு வெண்கலம் பதக்கமும், ஆகமொத்தம் 162 வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மேலும் 29.07.2022-ந்தேதி முதல் 31.07.2022-வரையில் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று இறுதி நாளில் வெற்றி பெறுவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

மதுரை தெற்கு மாவட்ட  எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்

"தமிழக அரசே,மின் கட்டண உயர்வு முடிவினை கைவிடு,மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்து" என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் மாநிலம் தழுவிய சிமினி விளக்கேற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மதுரை தினமணி தியேட்டர்& முனிச்சாலை சந்திப்பு அருகே இன்று 29-07-2022 வெள்ளிக்கிழமை காலை  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை வகித்தார்.மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஆரிப்கான் வரவேற்புரை ஆற்றினார்.


மேலும்,இதில் அப்துல் ஹமீது (மாநில துணைத் தலைவர்,எஸ்டிபிஐ கட்சி),காஜாமைதீன் - மாநில பேச்சாளர்,(பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) சிராஜு நிஷா (மாவட்ட செயற்குழு உறுப்பினர், நேஷனல் உமன் ஃபிரண்ட்) ஆகியோர் கண்டன உரையாற்றினார்.இறுதியாக தெற்கு தொகுதி செயலாளர் எம் பி பாஷா அவர்கள் நன்றியுரை ஆற்றினர்.


இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மின் கட்டண உயர்வுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பினர்.


நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து - மு.க.ஸ்டாலின்


கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. படிப்புக்கு மட்டும் எத்தகைய தடைக்கல்லும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறோம். ‘திராவிட மாடல்’ தமிழ்நாடு அரசானது, ''கல்விக் கண்ணை திறப்பதையே பெரும்பணியாக கொண்டு செயல்பட்டு வருகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 கட்டளை மேட்டு வாய்க்கால் கரை உடைப்பு - ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் சென்று ஆய்வு



திருச்சி திருவெறும்பூர் கும்பக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு கட்டளை மேட்டு வாய்க்காலில் விவசாய நிலங்களுக்கு பயிர் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது இந்நிலையில் கட்டளை மேட்டு வாய்க்கால்  கரையில் உடைப்பு ஏற்பட்டது. 22 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த வாய்க்காலில் வரும் நீரால்  பாசனம் பெறுகிறது.

கரை உடைந்த பகுதியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.கரை உடைப்பு குறித்து நீர்வளத்துறை  அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.பின்னர்  ஆட்சியர் தெரிவித்த போது மதியத்திற்குள் இந்த கரை உடைப்பு சரி செய்யப்படும்.

விவசாயிகள்கவலை கொள்ள வேண்டாம். 22,000 ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பயன் பெறுவதால் கரை உடைப்பு சரி செய்வதற்கான பணி நீர்வளத்துறை அதிகாரிகள் தற்போது தொடங்கியுள்ளனர்.

தற்பொழுது கரை உடைந்து தண்ணீர் புதுக்கோட்டை மாவட்டம் பிடாரி ஏரிக்கு சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

திருச்சி மாநகரில் 101 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 7 மாதங்களில் 101 பேர் குண்டர் சட்டத்தில் கைது


திருச்சி மாநகரில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் ஏழே மாதங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக 80 நபர்கள் மீதும், மருந்து சரக்கு குற்றவாளிகள் 11 நபர்கள் மீதும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 நபர்கள் மீதும், இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 நபர்கள் மீதும், பெண்களை ஆபாசமாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் 1 நபர் மீதும், கள்ளசந்தையில் ரேசன் அரிசியை கடத்தியதாக 1 நபர் மீதும் ஆக திருச்சி மாநகரத்தில் இந்த ஆண்டு இதுவரையில் மொத்தம் 101 நபர்கள் அதிரடியாக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆணையிட்டுள்ளார்.


திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை விட,நடப்பாண்டில் கொலை மற்றும் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது.


திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்ட நடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் ‌ தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி