08/12/22

75 ஆவது சுதந்திர திருநாள்

அமுதப் பெருவிழா

தேசியக்கொடி மாணவர் அணிவகுப்பு ஊர்வலம்.





75 ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா தேசியக்கொடி மாணவர் அணிவகுப்பு ஊர்வலம் கே.எல்.என் பாலி டெக்னிக் கல்லூரி,கே.எல்.என் வித்யாலயா (சிபிஎஸ்இ) பள்ளி,கே.எல்.என் கல்வியியல் கல்லூரி சார்பில் இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் அனைத்து வீடுகளில் தேசியக்கொடி பரப்புரை செய்யும் நோக்கத்தில் இன்று(12.08.2022) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டு மதுரை கோழிமேடு,விரகனூர்,தெப்பக்குளம் சுற்றுப்பகுதிகளில் மாணவர்கள்,ஆசிரியர்கள்,அலுவலர்கள் தேசியக்கொடி ஏந்தி கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த அணிவகுப்பு தெப்பக்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் முன்னிலையில்,கல்லூரி செயலாளர் டி.ஆ.ர்.கே.பி.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.கல்லூரி முதல்வர் பி.வி.என்.ஆனந்தன்,துணை முதல்வர் கே.பி.சகாதேவன்,கே.எல்.என்.வித்யாலயா (சிபிஎஸ்இ)பள்ளி முதல்வர் ஜே.வேனி,துணைத் தலைவர்கள்,நிர்வாக அதிகாரி எஸ்,கே,ராஜ பிரபு,மேலாளர் டி.வி.லட்சுமணன்,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் 300 மாணவ,மாணவிகள் இந்த தேசியக்கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

இந்த அணிவகுப்பு ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் டாக்டர் கே.சகாதேவன்,நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் அனைத்து அலுவலர்கள்,பணியாளர்கள் இணைந்து மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

அணி வகுப்பின் போது தேசியக் கொடியின் மாண்பினை பற்றியும்,இந்திய திருநாட்டின் வலிமைகளை பற்றியும் எடுத்துக் கூறி மக்களிடையே ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 17 வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு மக்களிடையே பரப்புரை செய்யப்பட்டது.

நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற

போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி



தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளிலும் படிக்கின்ற மாணவர்களிடையே போதை பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டது.அதன் அடிப்படையில் கோ புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு நேற்று நடைபெற்றது 


இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேக் நபி தலைமை தாங்கினார். புதூர் சட்டம் ஒழுங்கு காவல் சார்பு ஆய்வாளர் ராஜகோபால்,போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அய்யனார்,போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் அழகர்சாமி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.



மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர் விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

 போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழி

கே என் நேரு பங்கேற்பு













திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்ணா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில்,பள்ளி,கல்லூரியைச் சேர்ந்த 11,950 மாணவ, மாணவிகள் பங்கேற்று போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, கதிரவன், அப்துல்சமது, மாநகர மேயர் மு.அன்பழகன் ஆகியோருடன் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி