08/22/22

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணை

மு.க.ஸ்டாலின் வழங்கினார்



இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உட்பட 9 பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளை  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

பெண்களுக்கான மரியாதை

விழிப்புணர்வு நிகழ்ச்சி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தொடங்கி வைத்தார்




பெண்களுக்கான மரியாதை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திருச்சி கிழக்கு  சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இந்நிகழ்சியை  தொடங்கி வைத்தனர்

பெண் கல்வி, உயரிய வளர்ச்சி,பாதுகாப்பு, ஆரோக்கியம், குடும்பம் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு சமுதாயத்தில் மரியாதை பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றை முக்கிய அம்சமாக கொண்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது 

இந்த நிகழ்ச்சியில்,துணை மேயர்.திவ்யா,மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளரும் மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன்,பகுதி கழகச் செயலாளர் மருந்து கடை மோகன், வட்டக் கழக செயலாளர்கள் சிவகுமார்,சங்கர்,நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்,மற்றும் கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

அர்ச்சகர்களுக்கான ஓதுவார் பயிற்சி பள்ளி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்




தமிழக அரசின் அனைத்து சாதிகளும்  அர்ச்சகர் ஆகலாம் என்பதனை கொண்டு தமிழகம் முழுவதும் அர்ச்சகர்களுக்கான ஓதுவார் பயிற்சி பள்ளியை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டது...

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், கோயில் தக்கார், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன்,மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் நாகராஜன், இந்து அறநிலையதுறை இணை ஆணையர், அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில் துணை ஆணையர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

திருவெறும்பூர் தொகுதி பள்ளிமாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்






திருவெறும்பூர் தொகுதி, பாய்லர் பிளாண்ட் மேல்நிலைப் பள்ளியில், திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்ட மாணவ செல்வங்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து சிறப்புரையாற்றினார் 

10 பள்ளிகளை சார்ந்த 1443 மாணவ செல்வங்களுக்கு ரூ.72,90,930 இலட்சம் மதிப்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன்,ஒன்றிய கழகச் செயலாளர் கே.எஸ்.எம்.கருணாநிதி,துவாக்குடி நகர செயலாளர் காயாம்பு,பேரூர் கழக செயலாளர் தங்கவேல், பெல் தொ.மு.ச.பொதுச் செயலாளர் கணேஷ்குமார்,முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி ஆகியோரும் மாணவச் செல்வங்களும், ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

திருச்சியில் நாளை 23.08.2022

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்


திருச்சி மணிகண்டம் அம்மாபேட்டை துணை மின் நிலையங்களில் நாளை (23.08.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையொட்டி மணிகண்டம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறப்படும் தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர், மாத்தூர் எசனப்பட்டி ஆகிய பகுதிகளிலும் 

அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோக பெறப்படும் காந்திநகர், கள்ளிக்குடி, புங்கனூர், அரியாவூர், சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர் குட்டப்பட்டு, பூலங்குலதுபட்டி, சித்தானந்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி

ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருச்சி பெருநகர கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி