08/27/22


சிந்திக்க சில நொடிகள் நூல் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு சிறப்புரை


செல்வி ஜெ சுல்தானா பர்வீன் எழுதிய  சிந்தனைக்காக சில நிமிடங்கள் மூன்று பாகங்கள் அடங்கிய புதிய நூல் வெளியீட்டு விழா தேனாம்பேட்டை திமுக இளைஞரணி அலுவலகம் அன்பழகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தமிழ்நாடு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் தலைமை தாங்கினார்.நூலின் பதிப்பாசிரியர் நிலா ஒளி பதிப்பகத்தின் உரிமையாளர் ஆர்.நயினார் முஹம்மது முன்னிலை வகித்தார்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நூலை வெளியிட்டு சிறப்புரை யாற்றினார்.

இவ்விழாவில் எல்.கே.எஸ்.ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மீரான், முன்னாள் அமைச்சர் தங்கவேலு,தேனி மாவட்ட  தி.மு.க., பொறுப்புக் குழு உறுப்பினர்  கம்பம் சாதி எம்.சி,ராயப்பேட்டை கூட்டுறவு சங்க செயலாளர் அசன் மைதீன், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந் மாநிலச் செயலாளர் எஸ்.எல்.சிக்கந்தர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தமுமுக செயலாளர் பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி வாழ்த்துரை வழங்கினார்.



 இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
திருச்சி தெற்கு மாவட்ட
மகளிர் அணி சார்பாக
முப்பெரும் விழா




இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது.நிகழ்வின் தொடக்கமாக முதலில் தாய் சபையின்  கொடியை அலாவுதீன் அவர்கள் முன்னிலையில் மேற்கு தொகுதி அமைப்பாளர் கே. எம். எஸ். அப்துல் கபூர் ஏற்றினார்.

நிகழ்ச்சி நிரலின் ஆரம்பத்தில் மகளிரணி மாவட்ட துணைத் தலைவி ஒய் .பீர் நிஷா கிராத் ஓத, மாவட்ட பொருளாளர் எஃப் .ஆரிபா வரவேற்புரை நிகழ்த்தினார்.தலைமை உரையை மகளிர் அணி மாவட்ட தலைவி பேராசிரியர் முனைவர் பைரோஸ் வழங்க, மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவி எம்.ரஜபுன்னிஸா வாழ்த்துரை வழங்கினார்.





அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.கே.ஜாகிர் உசேன், துருப்பு பள்ளிவாசல் தலைவர் கே.எம்.பி.அப்துல் ஜலீல் மற்றும்  மேற்கு தொகுதி அமைப்பாளர் கே.எம்.எஸ்.அப்துல் கபூர் சிறப்புரை நிகழ்த்தினார்.திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் நிறைவு உரை ஆற்றினார்.


மேலும் இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பி.எம்.ஹுமாயூன்,திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் H.சையது ஹக்கீம்,இளைஞர் அணி துணைத் தலைவர் முகமது கவுஸ் மற்றும் பேராசிரியர் மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நிகழ்வின் இறுதியாக மாவட்ட செயலாளர் K.M.K.ஹபீபுர் ரஹ்மான், அரசு வழக்கறிஞர் M.K.ஜாகிர் உசேன்,மாவட்டத் துணைத் தலைவர் கே.எம்.பி. அப்துல் ஜலீல்,மேற்கு தொகுதி அமைப்பாளர் கே.எம்.எஸ்.அப்துல் கபூர் மற்றும் A.K.அலாவுதீன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.மாவட்ட துணைத் தலைவி A.ஆயிஷா நன்றி உரையாற்றினார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

இந்தியா சர்கிள்

இணையதள பத்திரிகை

அறிமுகம்



புதிதாக தொடங்கப்பட்ட  இந்தியா சர்கிள் ( www.indiacircle.in ) இணையதள பத்திரிகையின் நிறுவனர் மற்றும் பத்திரிகையாளர் அஹமது அப்துல்லாஹ், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் இணையதள பத்திரிகையை அறிமுகப் படுத்தினார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி