08/30/22

திருச்சியில் மக்களை தேடி மாநகராட்சி குறைதீர் முகாம்




தமிழக முதல்வரின் உத்தரவின்படி  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் - 2 க்குட்பட்ட 13 வார்டு பகுதிகளை சேர்ந்த மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்  பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி,சொத்து வரி உள்ளிட்ட ஆணைகளை வழங்கினார்.

அருகில் துணை மேயர் திவ்யா, மண்டலக்குழுத் தலைவர் ஜெயநிர்மலா, நகரப் பொறியாளர் சிவபாதம், மாமன்ற உறுப்பினர்கள் லீலா வேலு, பிரபாகரன ரிஸ்வானா பானு, சண்முகப்பிரியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

திரு.வி.க நகர் மண்டலம் 6-ல்
மேயர் பிரியா ராஜன் ஆய்வு








தமிழக முதல்வரின் ஆலோசனைபடி பணிகளை துரிதபடுத்த வேண்டி நேற்று  (29.08.2022) திரு.வி.க நகர் மண்டலம் 6-ல் மேற்க்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு  சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் ஆய்வு மேற்கொண்டார்

 இந்த ஆய்வின் போது திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர்  தாயகம் கவி MLA, அரசு முதன்மை ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி.இ.ஆ.ப., மற்றும் துணை ஆணையாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என‌ பலர் உடனிருந்தனர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம்





தமிழக முதல்வரின் ஆலோசனைபடி, பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று (30.08.2022) ரிப்பன் கட்டிட மாமன்றக் கூட்டரங்களில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணை மேயர் சைதை மு.மகேஷ்குமார், அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடி இ.ஆ.ப, நிலைக்குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

TN Urban E-sevai செயலியை
கே.என்.நேரு
தொடங்கி வைத்தார்














முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மை செயல் திட்டம் குறித்த ஒருநாள் கருத்தரங்கை சென்னையில் இன்று  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

இந்த கருத்தரங்கில் சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி செலுத்துதல், புகார் பதிவு செய்தல் உள்ளிட்ட பல வசதிகளுடன் கூடிய TN Urban E-sevai செயலியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்துவைத்தார்.

அதைத்தொடர்ந்து எழில்மிகு நகரம் என்ற தலைப்பில் தூய்மை நகரங்களின் முயற்சிக்கான மாத இதழையும் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில், துறைசார்ந்த அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு

அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு





புதுடெல்லியில் இன்று (30.08.2022) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்-ஐ அவரது இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் சந்தித்து சென்னையில் நடைபெறவுள்ள புதுமைப்பெண் திட்டம் மற்றும் 26 "தகைசால் பள்ளிகள்" மற்றும் 15 "மாதிரிப் பள்ளிகள்"    தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி