09/14/22

பிரேமலதா விஜயகாந்த்
கலந்து கொண்ட விழாவில்
போக்கு வரத்து நெரிசல்


விழுப்புரம் மாவட்டம் கோலியனுர் அடுத்துள்ள வளவனுரில் தே.மு.
தி.க கட்சினர் முப்பெரும் விழா நடத்தினர்.அதில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கலந்து கொண்டார்.இதனால் அங்கு போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

நமது நிருபர்R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி

மாணவர்களை நல்வழிப்படுத்தும்

“சிற்பி'' திட்டம்

மு.க.ஸ்டாலின் தொடங்கினார்




தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் “சிற்பி' (SIRPI - Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, சிற்பி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு (Nodal Officers) பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இ.கா.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

ராகுல் காந்தியுடன் ஒரு பயணம் நவாஸ்கனி எம்.பி





இது குறித்து நவாஸ்கனி எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள இந்திய ஒற்றுமைப் பயணத்தை ஆதரிக்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருள் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் மொய்தீன் அறிவுறுத்தலின்படி நடை பயணத்தில் சிறிது தூரம் பங்கேற்று ராகுல் காந்தியுடன் நடந்து சென்றேன்.

மக்களை ஒன்றிணைப் பதற்கான சிறப்பான முயற்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆதரவையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தோம்.

நாட்டின் ஜனநாயகத்தை பன்முகத்தன்மையை மதச்சார்பின்மையை பாதுகாக்க நாட்டை பாசிசத்தின் பிடியிலிருந்து மீட்க மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டிய முக்கியமான காலகட்டம் இது.

எப்படி இந்திய விடுதலைப் போரில் காங்கிரஸ் பேரியக்கத்தோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கரம் சேர்ந்து வலுவாக நின்றதோ அதேபோன்று தற்போது நடைபெறும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான போராட்டத்திலும் காங்கிரஸ் பேரியக்கத்தோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிற்கும் என்ற ஆதரவையும் உறுதியையும் நாங்கள் தெரிவித்து இருக்கிறோம்.

கடந்த 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் காங்கிரஸ் பேரியக்கத்தோடு அனைத்து நிலைகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுதுணையாய் இருந்திருக்கிறது.

தற்போது நாடு இருக்கும் முக்கியமான சூழலிலும், நாட்டை பாதுகாத்திட, நாட்டின் மாண்பை பாதுகாத்திட காங்கிரஸ் பேரியக்கத்தின் கரங்களை வலு சேர்க்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை நிற்கும்.

நாட்டின் ஒற்றுமைக்கான ராகுல் காந்தி-ன் இந்த பயணம் வெற்றி பெற்று மகத்தான மாற்றத்தை தரும் என நம்புகிறோம்.

இந்தப் பயணத்தின் முடிவு நாட்டின் விடிவாக திகழ வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

மதத்தின் பெயரால் மக்களை பிரித்து நாட்டின் ஜனநாயகத்தை மதச்சார்பின்மையை பன்முகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் பாசிசவாதிகளின் பாசிச எண்ணங்களை ராகுல் காந்தி-ன் ஒற்றுமை பயணம் தகர்த்தெறியும்.

வெறுப்பை வேரறுத்து, நல்லிணக்கத்தை விதைக்கும் இந்த பயணம் வெற்றி பெற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-ன் சார்பில் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஆதரவையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறோம்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

பள்ளி வாகனம்

நேருக்கு நேர் மோதி விபத்து






ஊத்தங்கரை அடுத்துள்ளதண்ணீர் பந்தல் அருகே பள்ளி வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.ERK காலேஜ் பஸ் தீரன் சின்னமலை பள்ளி வாகனமும் நேருக்கு நேர் மோதியது அதில் பலத்த காயத்துடன் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.

நமதுநிருபர் - V.சரவணன் – கிருஷ்ணகிரி