அண்ணா பிறந்த தினம்
கே.நவாஸ்கனி M.P புகழாரம்
உணர்வில் கலந்த நம் தாய் மண்ணிற்கு தமிழ்நாடு என பெயர் பெற்று தந்த தமிழக அரசியல் வரலாற்றின் சகாப்தம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று.,
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என முழங்கி நல்லிணக்கத்தின் வழிநின்று திராவிட அரசியலை உயர்த்தி பிடித்த சிறப்பு அண்ணாவிற்கே சாரும்.
தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட கட்சிகளுக்கும் முஸ்லிம் லீகிற்கும் ஒரு தவிர்க்க இயலா பந்தம் உண்டு.
அது அன்றைய திராவிட கட்சியை கட்டமைத்த பேரறிஞர் அண்ணாவும், முஸ்லிம் லீக்கை கட்டமைத்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தொடங்கி இன்று வரை நீள்கிறது.
அறிஞர் அண்ணாவை பேரறிஞர் அண்ணா என பிரகடனப்படுத்திய வரலாறு எங்களுடைய தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களுக்கு உண்டு.
1949 களிலேயே ஹிந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியின் பெருமையையும் அரசியல் நிர்ணய சபையில் பேசிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்-ஐ,
எங்களுடைய பிரதிநிதிகள் இருந்தால் என்ன பேசி இருப்போமோ, அதையே காயிதேமில்லத் பேசினார் என்று திராவிட இயக்க தலைவர்கள் வியந்து போற்றிய வரலாறும் உண்டு.
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் கே. நவாஸ்கனி M.P., அண்ணாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
சிறப்பு
நிருபர் - ஜே.இப்ராஹிம் - தூத்துக்குடி