கேரள மாநில
ஜமியத்துல் உலமா சபை
திருச்சி IUML செயலாளருடன்
ஆலோசனை
நேற்றைய தினம் 17.09.2022 சனிக்கிழமை த்தில் புகழ் பெற்ற சமஸ்த்த ஜமியத்துல் உலமா சபையினுடைய நிர்வாகப் பெருமக்கள், கல்லூரியின் தாளாளர், செயலாளர் மற்றும் உலமாக்கள் மரியாதை நிமித்தமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஜனாப். K.M.K.ஹபிபுர் ரஹ்மான் அவர்களை சந்தித்தனர்.
நிகழ்வில் தமிழ்நாட்டில் அரபி கல்லூரி மற்றும் மதரஸா தொடங்கவும், அதற்கான இடம் தெரிவு செய்து பள்ளி மற்றும் அரபி கல்லூரி ஆரம்பித்தல் தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.
நிகழ்வில் திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹாஜி.G.H. ஹக்கீம், இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி. S.ஷேக் முஹம்மது கௌஸ் மற்றும் பேராசிரியர் மொய்தீன் அப்துல் காதர், AIKMCC திருச்சி மாவட்ட பொறுப்பாளர் முஹம்மது ஷகீர், மற்றும் பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.