ஆதார் அட்டை புதுப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 14வரை நீட்டிப்பு.

சமூக ஆர்வலர் கோவிந்தராஜனுக்கு பொதுமக்கள் பாராட்டு.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள கோபிநாத் பழனியப்பன் அவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்.



ஆதார் அட்டை புதுப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 14வரை நீட்டிப்பு:




ஆதார் கார்டை கட்டணமின்றி புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீடித்து ஆதார் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் 3 மாதம் கால அவகாசம் அளித்துள்ளது ஆதார் ஆணையம்.

ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்க ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறை விதிகளை கடந்த 2016 ஆம் ஆண்டு ஆதார் ஆணையம் கொண்டு வந்தது. இதன்படி ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள் ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ள தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் ஆதார் அட்டையை புதுப்பிக்க ஆதார் ஆணையம் மக்களை அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டையில் உள்ள பெயர் முகவரி புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை ஓட்டுனர் உரிமம் பான் கார்டு வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையை பெற்று இதுவரை புதுப்பிக்காதவர்கள் தங்களது ஆவணங்களை வைத்து ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம். ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுப்பித்தால் ரூபாய் 50 கட்டணமாக வசூலிக்கப்படும்.ஆனால் இந்த சேவையை டிசம்பர் 14 வரை இலவசமாக மை ஆதார் எனும் இணையத்தில் அப்டேட் செய்யலாம் என ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

சமூக ஆர்வலர் கோவிந்தராஜனுக்கு பொதுமக்கள் பாராட்டு:

கோவிந்தராஜன்
சமூக ஆர்வலர் கோவிந்தராஜன்.சென்னை பெரம்பூர் பகுதி லட்சுமி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜன்.
இவர் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்கள் குறைகளை அரசு அதிகாரிகளிடம் புகார் அழித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலைதான் காணப்படுகிறது.

ஆனால் கோவிந்தராஜன் அவர்களின் கவனத்திற்கு வரும் மக்களின் பொதுவான பிரச்சினைகளை தானாக முன்வந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நேரடியாக சென்று தீர்க்கவேண்டிய மக்கள் பிரச்சினைகளைப் பற்றி எடுத்துக் கூறி, சுமூகமான முறைகளில் பல்வேறு வகையான மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளார்.

அரசு அதிகாரிகளிடமும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடமும் நட்புறவு வைத்துள்ள இவர், சமீபத்தில் சைதாப்பேட்டையில் நாய்களின் தொல்லையால் அவதிப்பட்ட அப்பகுதி மக்களின் நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி, நாய்களினால் ஏற்படும் தொல்லைகளை தீர்த்து வைத்துள்ளார்.

பொது மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்பணித்து வரும் சமூக ஆர்வலர் கோவிந்தராஜன் அவர்களுக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது. சமூக ஆர்வலராக செயல்பட்டு வரும் கோவிந்தராஜன் அவர்களுக்கு சென்னை மாநகர கவுன்சிலர் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள கோபிநாத் பழனியப்பன் அவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து:



9/9/24
ன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசியச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள கோபிநாத் பழனியப்பன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கு.செல்வப் பெருந்தகை MLA, மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் துணைத் தலைவர் இதயத்துல்லாஹ், சிறுபான்மை துறை மாநில தலைவர் முஹம்மது ஆரிப் ஆகியோருடன் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி சேப்பாக்கம் பகுதி 63 வது (அ) வட்டத் தலைவர் புதூர் சண்டி ஜமீன் SANKS.நயீப்கான்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்:

சீதாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்.
அவருக்கு வயது 72, சுவாசப் பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக பாடுபட்டு வந்த கடந்த 50 ஆண்டுகளாக ஒலித்த ஏழைகளின் குரல் ஓய்ந்தது என புகழாரம் சூட்டி அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours