திருச்சியில் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
திருச்சியில் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக சுலக்சனா, தில்லைநகர் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரத்தின வள்ளி ,தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக கருணாகரன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டராக வசுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொன்மலை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அஜிம் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார் .உறையூர் சட்ட ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மணிராஜ் மாநகர நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கார்த்திகா போலீஸ் ஸ்டேஷனில் பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார் இதற்கான உத்தரவை திருச்சி மாநகர காவல்துறை கமிஷனர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours