திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரம் ''ஸ்ரீமதி'' மரணத்திற்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்
தமிழக அரசே!கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டும்!நீதி கேட்டு போராடியவர்களை விடுதலை செய்! சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாக, அதிகார வர்க்க சதியை முறியடிப்போம்! மாணவர்களை பிராய்லர் கோழியாக மாற்றும் கல்வி தனியார்மயதிற்கு நிரந்தர தீர்வு ! என்ற கோரிக்கையின் அடிப்படையில் திருச்சியில் இன்று 26.7.22 காலை 11 மணிக்கு மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயக அமைப்புகள் விவசாய சங்கம் இணைந்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி ரயில் நிலையம் ஜங்ஷன் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரம் செயற்குழு உறுப்பினர் நிர்மலா தலைமையில் மாநிலத் துணைச் செயலாளர் செழியன் சிறிது நேரம் பேசினர்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னத்துரை, மக்கள் உரிமை கூட்டணி மாவட்டத் தலைவர் காசிம்,ஜோசப், தமிழ் தேச மக்கள் முன்னணி வழக்கறிஞர் கென்னடி, மக்கள் கலை இலக்கிய கழகம் மாவட்ட செயலாளர் ஜீவா, மகஇக கலைக்குழு பொறுப்பாளர் லதா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட பொருளாளர் வின்சென்ட் ,புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்டத் தலைவர் கோபி, ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர் மணலி மற்றும் 50க்கும் மேற்பட்ட பலர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பி, பதாகைகளை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours