திருச்சி சமயபுரம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பிரதாப். இவர் தனது காரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்கி கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவில் திடீரென அவருடைய கார் திறக்கப்படும் சத்தம் கேட்டது திடுக்கிட்டு விழித்த பிரதாப் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது அப்போது ஒரு பெண் காரை திறந்து கொண்டிருப்பதைக் கண்டார்.
உடனே மெல்ல வெளியே வந்து அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து சமயபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் இருந்து செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பது தெரியவந்தது
அவர் வைத்திருந்த செல்போன் சமயபுரம் மருதூர் ரோடு பகுதியில் வசிக்கும் லட்சுமணன் என்பவர் வீட்டுக்குள் நுழைந்து திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆனந்தி மீது வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours