ரயில்வே பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மதுரையில் 1966 முதல் 2022 வரை ரயில்வே பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது.
மதுரை ரயில் நிலைய குடியிருப்பு பகுதிக்குள் செயல்படும் மதுரை இருபாலர் மேல்நிலைப்பள்ளி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1894ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
128 ஆண்டுகள் சிறப்பாக இயங்கி வரும் மதுரை ரயில்வே பள்ளி தெற்கு ரயில்வேயில் சிறந்த பள்ளியாக செயல்பட்டுக் கொண்டுள்ளது.
மதுரை ரயில்வே பள்ளியில் 1966 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்தில் படித்தவர்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு பயின்று அரசுப்பணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணி புரியும் ஏராளமான முன்னாள் மாணவ மாணவிகள் அதிகமாக கலந்து கொண்டனர்.
மேலும்,முன்னாள் மாணவ,மாணவிகள் தங்கள் குடும்பத்தினருடனும், உறவினர்களிடம் கலந்து கொண்டு மீண்டும் ஒருவொருக்கொருவர் சந்தித்து கொண்டு தங்கள் நினைவுகளை வெளிப்படுத்தினர்.
மேலும் 1966-2022 ம் ஆண்டு மிகக்சிறப்பாக படித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும்,மதுரைக்கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
Post A Comment:
0 comments so far,add yours