கல்லணை சுற்றுலா சென்றவர்கள் மீது
பொதுப்பணித் துறை தாக்குதல்?
நடவடிக்கை எடுக்குமா அரசு?
நேற்று (31.07.2022) ஞாயிற்றுக்கிழமை கல்லணைக்கு சுற்றுலா சென்றவர்கள் மீது போதையில் பொதுப்பணித் துறையைச் சேர்ந்த கௌதம் என்பவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.அதை பாதிக்கப்பட்டவர்கள் கல்லனை தோகூர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் புகார் செய்தவர்களிடத்தில் தொலைபேசியை பிடுங்கி அதில் உள்ள வீடியோ தொகுப்பு முழுவதையும் போலீசார் அழித்துள்ளதாகவும்,தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும். சம்பந்தப்பட்டநபரை கைது செய்ய வலியுறுத்தி இன்று (01.08.2022)திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தொடர் சம்பவம் கல்லணையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இதை கண்டும் காணாத நிலையில் தான் தோகூர் போலீசார் உள்ளனர்.இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது?
Post A Comment:
0 comments so far,add yours