காவல்துறையினர் முன்னிலையில்
போதை பொருட்களுக்கு எதிராக
உறுதிமொழி
உலக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி அமர்வு நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமண்டபம் பகுதியில் கண்டொண்மென்ட் காவல் சரக காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில், போக்ஸ்வேகன் நிறுவன ஊழியர்களுக்கு போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் கருமண்டபம் பால்பண்ணை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்சியில் அமர்வு நீதிமன்ற காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் உடனிருந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours