IUML தேசிய தலைவர்கே.எம். காதர் மொகிதீன் மு க ஸ்டாலினுடன் சந்திப்பு



இன்று (20-08-2022) தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் அப்துல் ரஹ்மான் Ex.எம்.பி மற்றும் கே.நவாஸ் கனி.எம்.பி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 75-வது நிறுவன ஆண்டு தினமான 2023 மார்ச் 10-ந் தேதி சென்னையில் நடக்க இருக்கிற முஸ்லிம் லீக் பவளவிழா நிகழ்ச்சியில் பல்சமய சான்றோர் பெருமக்களுக்கு சமய நல்லிணக்க விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை அன்புடன் ஏற்று முதலமைச்சர் இசைவு தந்துள்ளார்.. 

மேலும் சமுக,சமுதாய தொடர்பான பல்வேறு செய்திகள் மற்றும் கோரிக்கைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது

அனைத்து தகவல்களையும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்ட முதல்வர் அனைத்து கோரிக்கைகளையும் பரிசலிப்பதாக உறுதி அளித்துள்ளார்..


இந்நிகழ்வில் இந்து அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே.சேகர் பாபு, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வே இறையன்பு இ.ஆ.ப., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் Ex.எம்.பி மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி.எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours